தனிமைப்படுத்தல், நோய்த்தடுப்பு சட்டத்தின் கீழ் 213 அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

தனிமைப்படுத்தல், நோய்த்தடுப்பு சட்டத்தின் கீழ் 213 அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

தனிமைப்படுத்தல், நோய்த்தடுப்பு சட்டத்தின் கீழ் 213 அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2021 | 2:48 pm

Colombo (News 1st) மேல் மாகாணத்தில் சுகாதார ஆலோசனைகளை மீறும் வகையில் செயற்பட்ட 213 அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாணத்தில் 1331 அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நேற்று (15) சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சுகாதார ஆலோசனைகளை மீறிச் செயற்படும் நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

சுற்றாடல் பிரிவு அதிகாரிகள், பிரதேச பொலிஸாரின் பங்குபற்றுதலில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2020 ஒக்டோபர் 15 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைய செயற்படாத நிறுவனங்களை இலக்கு வைத்து இந்த விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் 1098 நிறுவனங்கள் வர்த்தமானிக்கு அமைய சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 213 நிறுவனங்கள் சுகாதார ஆலோசனைகளை மீறியுள்ளதுடன், தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டத்தின் கீழ் குறித்த அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்