கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி தப்பியோட்டம்

கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி தப்பியோட்டம்

கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி தப்பியோட்டம்

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2021 | 2:40 pm

Colombo (News 1st) கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதியொருவர் தப்பியோடியுள்ளார்.

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த கைதி, தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போதே அவர் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

வெலிகமவை சேர்ந்த குறித்த கைதி 5 வருடங்களும் 3 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒருவர் என சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தப்பிச்சென்ற கைதியைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்