இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பம்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பம்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2021 | 3:16 pm

Colombo (News 1st) இந்தியா முழுவதும் 3006 நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த பணிக்காக அவசர கால பயன்பாட்டை கருத்திற்கொண்டு Covishield, Covaxin ஆகிய இரு தடுப்பூசிகளுக்கும் இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சுமார் 1.65 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு பிரித்து அனுப்பி உள்ளது.

நாடு முழுவதும் தடுப்பூசிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 10.30 மணிக்கு இந்திய பிரதமர் மோடி டெல்லியில் காணொளிக் காட்சி வாயிலாக தடுப்பூசி போடப்படும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு நிலையத்திலும் தடுப்பூசி செலுத்தப்படும் அறை, தடுப்பூசி செலுத்திய பிறகு பயணாளிகளை 30 நிமிடங்கள் அமர வைத்து கண்காணிக்கும் அறை, அவசர கால மருத்துவ சிகிச்சை அறை போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போட்டுக்கொள்வதை சிரமமின்றி மேற்கொள்வதற்காக ஏற்கனவே 2 தடவை நாடு முழுவதும் ஒத்திகை பார்க்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்