சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தம்

சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தங்கள்: நீதி அமைச்சு தீர்மானம்

by Staff Writer 14-01-2021 | 3:39 PM
Colombo (News 1st) சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த சட்டத்தின் முக்கிய இரண்டு சரத்துகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சின் ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி U.R.D. சில்வா தெரிவித்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாகவே பிணை பெற்றுக்கொள்ள முடியும். இது அசாதாரண விடயமாக எமக்கு தெரிகின்றது. இந்த சட்டத்தின் கீழ், சிறு தவறுகளுக்காகவும் சாட்சியாளர்களும் சட்டத்தரணிகளும் அச்சுறுத்தப்படும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. தற்போது மாகாணங்களிலுள்ள மேல் நீதிமன்றங்களுக்கு பிணை வழங்குவதற்கான அதிகாரத்தை வழங்குமாறு கோருகின்றோம்
என U.R.D. சில்வா குறிப்பிட்டார். இதேவேளை, தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை திருத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் ஆலோசகர், ஜனாதிபதி சட்டத்தரணி U.R.D. சில்வா மேலும் தெரிவித்தார்.