தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை ஹொரணையில் திறந்து வைப்பு

தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை ஹொரணையில் திறந்து வைப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2021 | 5:10 pm

Colombo (News 1st) தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை ஹொரணையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

புதிய டயர் தொழிற்சாலை வகவத்த ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் 155 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதிநவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படும் உற்பத்தியில் அதிகமான உற்பத்திகள் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டே மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சிறியரக கார்களில் இருந்து கனரக வாகனங்கள் வரையில் அனைத்து விதமான டயர்களும் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படவுள்ளன.

வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இந்த தொழிற்சாலைக்கு உரித்தான உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் நந்தன லொகுவித்தானவினால் வரவேற்கப்பட்டதுடன், பெயர் பலகையை திரை நீக்கம் செய்த பின்னர், ஜனாதிபதி டயர் தொழிற்சாலையை பார்வையிட்டார்

இந்த தொழிற்சாலையின் முதற்கட்டத்திற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்