ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2021 | 2:33 pm

Colombo (News 1st) தைத்திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் தமது வாழ்த்து செய்திகளை வௌியிட்டுள்ளனர்.

இன, மத பேதமின்றி இலங்கை மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தை கொண்டு வருவது தனதும், தமது அரசாங்கத்தினதும் ஒரே நோக்கம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த உன்னதமான நோக்கத்தை அடைந்துகொள்வதற்கான வழிவகைககள், அரசாங்கத்தின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நன்றியுணர்வு என்பது இலங்கை சமூகத்தின் தனித்துவமான பண்பாகும். அறுவடையின் முதல் பகுதியை சூரியனுக்கு படைக்கும் தைப்பொங்கல் பண்டிகை, பழங்காலத்திலிருந்தே சமூகம் மதித்து வரும் விழுமியங்களை குறிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தைப்பொங்கல் பண்டிகை தேசிய கலாசாரத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. மனித சமூகத்தின் உன்னதமான நன்னெறிகளை குறிக்கும் வகையில், தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது குறிப்பிட்டுள்ளார்.

இயற்கையின் பெறுமதி சமத்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டியதன் முக்கியத்துவம், நன்றி தெரிவிக்கும் உயரிய பண்பு போன்ற அனைத்து மதங்களினதும் மனித நேயக்கருத்துக்களை தைப்பொங்கல் பண்டிகை எடுத்தியம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களாகிய அனைவரும் இனம், மதம், மொழி ஆகியவற்றினால் வேறு பட்டிருந்தாலும் கூட அனைவரினதும் எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் ஒன்றாகும் எனவும் பிரதமர் தமது பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற உன்னத இலட்சியத்துடன் இலங்கை மக்களது வாழ்க்கையை முன்னேற்றிச் செல்லும் இத்தருணத்தில் இலங்கை மற்றும் உலகெங்குமுள்ள தமிழா்கள் உவகையுடன் கொண்டாடும் இப்பொங்கல் திருநாளானது மகிழ்ச்சிகரமாக, நன்றி செலுத்துகின்ற மற்றும் மீளமைப்பிற்கான மக்கள் திருநாளாக அமைந்து, தமிழ் மக்களும் ஏனைய சமூகத்தவா்ககளும் ஒன்றுபட்டு எதிர்கால இலங்கையின் சமாதானத்திற்காக உறுதிபூணும் ஒர் தேசிய நல்லிணக்க தினமாக அமைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் அனைவரதும் எதிர்கால வாழ்வில் சகல எதிர்பார்ப்புகளும் நிறைவேறி சாந்தியுடனும் சமாதானத்துடனும் சௌபாக்கியத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அறுவடை விழா என அர்த்தப்படும் தைப்பொங்கல் உற்சவம் மனித குலம் விலங்குகள், இயற்கையிடம் கருணை காட்டும் உன்னத நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் திருவிழா பொது நட்பின் உச்சமாகவும் பரஸ்பர புரிந்துணர்வின் வௌிப்பாடாகவும் காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் தமது பொங்கல் தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

உலக தலைவர்களும் தைத்திருநான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உலகவாழ் தமிழர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்