இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஸ்திரமான நிலையில் இங்கிலாந்து

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஸ்திரமான நிலையில் இங்கிலாந்து

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஸ்திரமான நிலையில் இங்கிலாந்து

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2021 | 6:13 pm

Colombo (News 1st) இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி ஸ்திரமான நிலையிலுள்ளது.

இன்றைய முதலாம் நாள் ஆட்டநேர நிறைவில் இங்கிலாந்து இரண்டு விக்கட்களை இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அணித்தலைவர் Joe Root 66 ஓட்டங்களுடனும், Jonny Bairstow 47 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான Zak Crawley மற்றும் Dom Sibley ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தாலும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த இவர்களின் இணைப்பாட்டம் அணியை வலுப்படுத்தியது.

பந்து வீச்சில் லசித் அம்புல்தெனிய 2 விக்கட்களை வீழ்த்தினார்.

காலியில் இன்று ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அதன் முதல் இனிங்ஸில் 135 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் இழந்தது.

ஆரம்பம் முதலே இலங்கை அணியின் விக்கட்கள் சீரான இடைவௌியில் வீழ்த்தப்பட்டன.

அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 28 ஓட்டங்களையும் அஞ்சலோ மெத்யூஸ் 27 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.

தசுன் சானக்க 23 ஓட்டங்களையும் குசல் பெரேரா 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஏனைய வீரர்கள் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் Dom Bess 5 விக்கட்களையும், Stuart Broad 3 விக்கட்களையும் வீழ்த்தினர்.

ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி இதுவாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்