பேச்சுரிமையை பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகருக்கு கடிதம்

பேச்சுரிமையை பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகருக்கு கடிதம்

பேச்சுரிமையை பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகருக்கு கடிதம்

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2021 | 7:34 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுரிமையை பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகருக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கான உரிமை சட்டபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பின்புலத்தில், பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு, ஜனாதிபதி குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் பெயரைக் குறிப்பிட்டு வழங்கிய பதில்,பேசும் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதை காண முடிவதாக ஐக்கிய மக்கள் சக்தி கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்