English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
13 Jan, 2021 | 4:27 pm
Colombo (News 1st) வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 26 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனையின் கீழ் இந்திய மீனவர்கள் 26 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.
ஊர்காவற்துறை நீதவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் இன்று மீனவர்கள் அனைவரும் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களின் நான்கு படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் அரசுடைமையாக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 26 பேரும் காரைநகர் கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இரண்டு தடவைகள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
20 Dec, 2020 | 08:19 PM
08 Dec, 2020 | 02:05 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS