by Staff Writer 12-01-2021 | 10:02 AM
Colombo (News 1st) குறுந்தூர போக்குவரத்திற்கு பயணிகளுக்கு ஏற்றவகையிலான 200 சொகுசு பஸ்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
போக்குவரத்து அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் சன நெரிசல்மிக்க பகுதிகளில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய இந்த பஸ்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.