by Staff Writer 12-01-2021 | 4:41 PM
Colombo (News 1st) மேலும் 165 உக்ரைன் பிரஜைகள் மத்தளை விமான நிலையத்தினூடாக இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் 2.40 அளவில் உக்ரைனுக்கு சொந்தமான விமானமொன்றின் மூலம் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்.
ஹிக்கடுவையிலுள்ள ஹோட்டலொன்றுக்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைனியர்கள் வருகை தந்த விமானத்தில் ஏற்கனவே நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் நாடு திரும்பவுள்ளனர்.
இதுவரை 1004 உக்ரைன் பிரஜைகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.