வேளாண் சட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு

வேளாண் சட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு

வேளாண் சட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

12 Jan, 2021 | 7:23 pm

Colombo (News 1st) அதானி குழுமம் உள்ளிட்ட பாரிய நிறுவனங்களுக்கு அனுகூலம் ஏற்படும் வகையில் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்த மூன்று வேளாண் சட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு இந்திய உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

விவசாயிகளின் துயரங்களை ஆராய்வதற்கென குழுவொன்றை நியமிக்குமாறு பிரதம நீதியரசர் அறிவுறுத்தியுள்ளார்.

அக்குழுவினூடாக தகவல்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் மீள் பரிசீலனை செய்யும் வரை வேளாண் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது தற்காலிகமாக இந்திய உச்ச நீதிமன்றத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக இந்திய விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தியதுடன், பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான வர்த்தகர்களுக்கு அனுகூலம் ஏற்படும் வகையில் இந்த சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக போராட்டம் நடத்திய விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்