வவுனியாவில் 19 கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கம்

வவுனியாவில் 19 கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கம்

வவுனியாவில் 19 கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கம்

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2021 | 6:16 pm

Colombo (News 1st) வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் 19 கிராம சேவையாளர் பிரிவுகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராம சேவையாளர் பிரிவுகள் எதிர்வரும் சனிக்கிழமை வரை முடக்கப்பட்டிருக்கும் என வவுனியா சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் மகேந்திரன் தெரிவித்தார்.

இதற்கமைய, A9 வீதியில் நொச்சிமோட்டை பாலம் மற்றும் இரட்டை பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள நகரசபையின் வரவேற்பு வளைவு, மன்னார் வீதியில் நெலுக்குளம் பொலிஸ் நிலையம், பூந்தோட்டம் சந்தி, மாமடு சந்தி ஆகிய பகுதிகள் பொலிசாரால் முடக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, இன்று இதுவரை 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை கொத்தணியை சேர்ந்த 302 பேர், சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்த 08 பேர் இதில் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 49,259 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 6,398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்