ரயில் பயணங்களுக்கான ஆசன முற்பதிவுகள் இன்று முதல் 

ரயில் பயணங்களுக்கான ஆசன முற்பதிவுகள் இன்று முதல் 

ரயில் பயணங்களுக்கான ஆசன முற்பதிவுகள் இன்று முதல் 

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2021 | 7:55 am

Colombo (News 1st) தூர பிரதேசங்களுக்கான ரயில் பயணங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளமையால், ஆசன முற்பதிவுகளை இன்று (12) முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் தூர பிரதேசங்களுக்கான ரயில் பயணங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ரயில்களில் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுவது, யாசகம் பெறுவது உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கல்கிசை முதல் காங்கேசன்துறைக்கான ரயில் சேவை, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை சேவையில் ஈடுபடும் உத்தரதேவி ரயில், கொழும்பு மற்றும் பதுளைக்கிடையிலான பொடிமெனிக்கே ரயில் சேவை, கோட்டை முதல் கண்டி வரையான ரயில் சேவை, மருதானை முதல் பெலிஅத்த வரையான ரயில் சேவை, மாத்தறை கொழும்புக்கிடையிலான ரயில் சேவைகளே இவ்வாறு சேவையில் ஈடுபடவுள்ளன.

இதற்கு மேலதிகமாக எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தினசரி போக்குவரத்தில் ஈடுபடும் ரயில்களின் சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை, இடைநிறுத்தப்பட்டுள்ள ஏனைய ரயில் சேவைகளை இன்று (12) முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்