முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பிற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை: உதய கம்மன்பில

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பிற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை: உதய கம்மன்பில

எழுத்தாளர் Bella Dalima

12 Jan, 2021 | 7:12 pm

Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட விடயத்தில் அரசாங்கம் எந்த வகையிலும் தலையீடுகளை மேற்கொள்ளவில்லையென அமைச்சரவை இணை ஊடகப் ​பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தூபியை உடைப்பதற்கு உப வேந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரே நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் மீண்டும் அதனை நிர்மாணிப்பதற்கும் அவர்களே நடவடிக்கை எடுத்ததாகவும் உதய கம்மன்பில கூறினார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் எந்த வகையிலும் தலையீடு செய்யவில்லை எனவும் அரசாங்கத்திற்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்