மாகாண சபை தேர்தல் முறை தொடர்பான மீளாய்விற்கு மூவரடங்கிய குழு நியமனம்

மாகாண சபை தேர்தல் முறை தொடர்பான மீளாய்விற்கு மூவரடங்கிய குழு நியமனம்

மாகாண சபை தேர்தல் முறை தொடர்பான மீளாய்விற்கு மூவரடங்கிய குழு நியமனம்

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2021 | 2:58 pm

Colombo (News 1st) மாகாண சபை தேர்தல் முறை தொடர்பான மீளாய்விற்கு மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

காணி அமைச்சின் செயலாளர் R.A.A.K. ரணவக்கவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுதந்த லியனகே மற்றும் காணி அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரும் இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

துறைசார் அமைச்சர் ஜனக்க பண்டாரவினால் இந்த மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முறை தொடர்பில் மீளாய்வு செய்து, மூன்று மாதங்களுக்குள் துறைசார் அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குழுவின் தலைவர், காணி அமைச்சின் செயலாளர் R.A.A.K. ரணவக்க குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்