தனியார் துறையினருக்கான சம்பள சலுகை காலம் நீடிப்பு

தனியார் துறையினருக்கான சம்பள சலுகை காலம் நீடிப்பு 

by Staff Writer 12-01-2021 | 1:03 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்று நிலையில் தனியார் துறையினருக்கு சம்பளம் வழங்குவதற்காக இணக்கம் காணப்பட்ட காலப்பகுதியை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவு செய்யப்படவிருந்த சலுகை காலத்தை எதிர்வரும் மார்ச் மாதம் இறுதி வரை நீடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்