கிண்ணியா – மாஞ்சோலை கிராமம் முடக்கப்பட்டது

கிண்ணியா – மாஞ்சோலை கிராமம் முடக்கப்பட்டது

கிண்ணியா – மாஞ்சோலை கிராமம் முடக்கப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2021 | 1:13 pm

Colombo (News 1st) திருகோணமலை – கிண்ணியா, மாஞ்சோலை கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (11) மாலை 06 மணி தொடக்கம் மாஞ்சோலை கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தெரிவித்துள்ளார்.

25 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையால் மாஞ்சோலை கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, மட்டக்களப்பில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 11 பேர் சுகாதார துறையை சேர்ந்தவர்கள் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர், வைத்தியர் நாகலிங்கம் மயூரன் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்