அமெரிக்க உயிரியல் பூங்காவில் உள்ள 8 கொரில்லாக்களுக்கு கொரோனா

அமெரிக்க உயிரியல் பூங்காவில் உள்ள 8 கொரில்லாக்களுக்கு கொரோனா

அமெரிக்க உயிரியல் பூங்காவில் உள்ள 8 கொரில்லாக்களுக்கு கொரோனா

எழுத்தாளர் Bella Dalima

12 Jan, 2021 | 3:39 pm

Colombo (News 1st) அமெரிக்காவின் சான் டியாகோ உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 8 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் சில குரங்குகளும் தொடர்ந்து இருமிக்கொண்டு இருப்பதாக குறித்த உயிரியல் பூங்காவின் செயல் இயக்குநர் லிசா பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்த உயிரியல் பூங்காவை பார்வையிட கடந்த டிசம்பர் 6 ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து கொரில்லா குரங்குகளை கவனித்து வருகின்றனர். வழக்கமான உணவுகளுடன் சத்து மாத்திரைகள் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

சளி மற்றும் இருமல் தவிர இந்த கொரில்லா குரங்குகளுக்கு வேறு எந்த உடல் நலப் பிரச்னையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்