ரவூப் ஹக்கீமிற்கு கொரோனா தொற்று உறுதி

ரவூப் ஹக்கீமிற்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 10-01-2021 | 1:58 PM
Colombo (News 1st) தாம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் ஒன்றில் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஹிக்கடுவ சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார்.