மேல் மாகாணம், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளிலுள்ள பாடசாலைகள் நாளை ஆரம்பம் 

மேல் மாகாணம், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளிலுள்ள பாடசாலைகள் நாளை ஆரம்பம் 

மேல் மாகாணம், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளிலுள்ள பாடசாலைகள் நாளை ஆரம்பம் 

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2021 | 2:54 pm

Colombo (News 1st) மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (11) ஆரம்பமாகவுள்ளன.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான கண்காணிப்பு பணிகள் இன்று (10) இடம்பெறுவதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்றும் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் நுளம்பு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 247 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 146 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்