சித்தியின் பராமரிப்பில் வளர்ந்துவந்த சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு

சித்தியின் பராமரிப்பில் வளர்ந்துவந்த சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு

சித்தியின் பராமரிப்பில் வளர்ந்துவந்த சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2021 | 10:25 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – பெரியகல்லாறு 02 பகுதியில் இன்று (10) காலை சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நாவலர் வீதியைச் சேர்ந்த 12 வயதான சிறுமி ஒருவரே காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வறுமையின் காரணமாக, தாய் வெளிநாடு சென்ற காரணத்தால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் சிறுமி தனது தாயின் சகோதரியின் பராமரிப்பிலேயே வளர்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமி இன்று காலை சித்தியின் வீட்டிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்