by Staff Writer 09-01-2021 | 4:32 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு நகரிலுள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களை நாளைய தினம் (10) மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார திணைக்களத்தின் பரிந்துரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர மேயர் டி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை நகர், காத்தான்குடி, அட்டாளைச்சேனை, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, உஹண ஆகிய 6 சுகாதார பிரிவுகள் கொரோனா சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.