வவுனியாவில் பாடசாலைகள் சில மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன

வவுனியாவில் பாடசாலைகள் சில மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன

வவுனியாவில் பாடசாலைகள் சில மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2021 | 3:32 pm

Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக வவுனியா நகரிலுள்ள சில பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

COVID-19 தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, தமிழ் மகா வித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலை, காமினி மகா வித்தியாலயம், முஸ்லிம் மகா வித்தியாலயம், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்