டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2021 | 7:31 pm

Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.

வன்முறை மேலும் தூண்டப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் அண்மைய பதிவுகள் தொடர்பில் கவனம் செலுத்திய பின்னர் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்க
தீர்மானித்ததாகவும் ட்விட்டர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், விதிமுறைகளை மீறி வன்முறைகளைத் தூண்டும் வகையில் செயற்பட்டால் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்க வேண்டி ஏற்டுமென ஏற்கனவே ட்விட்டர் நிறுவனத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஜோ பைடனிடம் உத்தியோகபூர்வமாக அதிகாரத்தை கையளிக்கும் வரை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்