ஜகார்த்தாவிலிருந்து பயணத்தை ஆரம்பித்த போயிங் 737 விமானத்தை காணவில்லை

ஜகார்த்தாவிலிருந்து பயணத்தை ஆரம்பித்த போயிங் 737 விமானத்தை காணவில்லை

ஜகார்த்தாவிலிருந்து பயணத்தை ஆரம்பித்த போயிங் 737 விமானத்தை காணவில்லை

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2021 | 5:24 pm

Colombo (News 1st) இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பயணத்தை ஆரம்பித்த பயணிகள் விமானமொன்று காணாமற்போயுள்ளது.

50-க்கும் அதிகமான பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்து சில நிமிடங்களில், விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ விஜய எயார் (Sriwijaya Air) விமான சேவைக்கு சொந்தமான போயிங் 737 விமானமே காணாமற்போயுள்ளது.

தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து Pontianak நகருக்கு செல்லும் வழியிலேயே விமானம் காணாமற்போயுள்ளது.

விமானத்தைத் தேடும் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளுக்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, காணாமற்போன விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் சிதிலங்கள் மாலே தீவுப் பகுதி கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் Sriwijaya Air விமானத்தின் பாகங்கள் என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்