ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இலங்கையர்கள் மூவருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இலங்கையர்கள் மூவருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2021 | 3:20 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இலங்கை பிரஜைகள் மூவருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டில் அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வௌிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் இணைந்து தாக்குதலுக்கான சதித் திட்டத்தை தீட்டியமை, அதற்கு தேவையான பொருட்களை வழங்கியமை உள்ளிட்ட பயங்கரவாத குற்றச்சாட்டில் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதி திணைக்களம் அறிவித்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவரும் ISIS அமைப்பின் உறுப்பினர்களாக செயற்பட்டுள்ளதாக அமெரிக்க நீதி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களுடைய குழுவே 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டதாவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 05 அமெரிக்க பிரஜைகள் அடங்கலாக 268 பேர் கொல்லப்பட்டதுடன், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அமெரிக்க நீதி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு இலங்கை மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அமெரிக்க ஒத்துழைப்பு வழங்கும் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்