உக்குவளையில் மண் சரிவால் 5 வீடுகள் பகுதியளவில் சேதம்

உக்குவளையில் மண் சரிவால் 5 வீடுகள் பகுதியளவில் சேதம்

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2021 | 7:15 pm

Colombo (News 1st) மாத்தளை – உக்குவளை பகுதியில் ஏற்பட் மண் சரிவினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் உக்குவளை பிரதேச சபைக்குட்பட்ட எல்வல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வீடுகளின் சுவர்களில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், நிலத்திலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் 5 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்