தேரர்களின் பெற்றோர், சகோதரர்களுக்கு சுகாதார காப்புறுதி அறிமுகம்

by Staff Writer 08-01-2021 | 8:07 PM
Colombo (News 1st) 'நாகராஜ ஷாக்ய புத்ர ஞாதி வைத்ய காப்புறுதி' என்ற பெயரில் புதிய காப்புறுதித் திட்டமொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அலரி மாளிகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காப்புறுதித் திட்டத்தின் ஊடாக தேரர்களின் பெற்றோர் மற்றும் சகோதரர்களுக்கு சுகாதார காப்புறுதி வழங்கப்படவுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது நாளொன்றுக்கு 10,000 முதல் 15,000 ரூபா வரை இந்த காப்புறுதித் திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்திய பரிசோதனை அல்லது ஔடதங்களுக்காக 25,000 ரூபா வரை இந்த காப்புறுதியின் ஊடாக செலுத்தப்படவுள்ளது. இந்த காப்புறுதித் திட்டத்தில் இணைவதற்கு வருடாந்தம் 2000 ரூபாவை செலுத்த வேண்டும் என்பதுடன் தான, தர்ம கைங்கரியங்களுக்கு அந்தப் பணத்தை செலவிடவுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது.