மஹர சிறைக் கலவரத்தில் உயிரிழந்தவர்கள் துப்பாக்கிச்சூட்டிலேயே இறந்ததாக வௌிக்கொணர்வு

மஹர சிறைக் கலவரத்தில் உயிரிழந்தவர்கள் துப்பாக்கிச்சூட்டிலேயே இறந்ததாக வௌிக்கொணர்வு

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2021 | 7:24 pm

Colombo (News 1st) மஹர சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த 11 கைதிகளும் சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டினாலேயே உயிரிழந்ததாக வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வௌிக்கொணரப்பட்டது.

பிரேத பரிசோதனை நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவினால் 8 கைதிகளின் மரண விசாரணை அறிக்கை இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த 8 பேரும் துப்பாக்கிச்சூட்டினால் உயிரிழந்ததாக நீதிமன்றத்தில் தெரியவந்ததுடன், இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஏனைய 3 கைதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு அமைய, அவர்கள் மூவரும் துப்பாக்கிச்சூட்டினாலேயே உயிரிழந்ததமை தெரியவந்தது.

இன்று நீதிமன்றத்தில் மரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட மூன்று கைதிகளும் COVID தொற்றுக்குள்ளானவர்கள் இல்லை என்பது தெரியவந்ததால், அவர்களின் பூதவுடல்களை அரசாங்கத்தின் செலவில் பொருத்தமான இடத்தில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, வத்தளை நீதவான் புத்திக ஶ்ரீ ராகம, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்