பெப்ரவரி நடுப்பகுதியில் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

பெப்ரவரி நடுப்பகுதியில் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

பெப்ரவரி நடுப்பகுதியில் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2021 | 5:45 pm

Colombo (News 1st) எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் இருந்து கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா நிலை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கான முன்பதிவுகளை உலக சுகாதார ஸ்தாபனத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறினார்.

இந்தியா மற்றும் ரஷ்யாவிடமிருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்