கொரோனா உக்கிரம்: நாட்டை முற்றிலும் முடக்குகிறது உக்ரைன்

கொரோனா உக்கிரம்: நாட்டை முற்றிலும் முடக்குகிறது உக்ரைன்

கொரோனா உக்கிரம்: நாட்டை முற்றிலும் முடக்குகிறது உக்ரைன்

எழுத்தாளர் Bella Dalima

08 Jan, 2021 | 5:35 pm

Colombo (News 1st) கொரோனா தொற்று தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் நாட்டை முழுவதுமாக முடக்குவதற்கு உக்ரைன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில், இன்று (08) முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை உக்ரைன் நாடு முடக்கப்படுகிறது.

இதன்படி, உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள் என்பன மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை அங்கு 1 மில்லியன் பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், அன்றாடம் புதிதாக 7000 பேர் வரையில் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. 19 ,588 COVID மரணங்கள் பதிவாகியுள்ளன.

கொரோனா தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொள்ளும் நிலை இல்லாததால், நாட்டை முடக்குவது மட்டுமே உக்ரைனுக்கு தற்போதிருக்கும் தீர்வாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்