கிழக்கு மாகாணத்தில் 6 பகுதிகள் சிவப்பு வலயங்களாக அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ளன

கிழக்கு மாகாணத்தில் 6 பகுதிகள் சிவப்பு வலயங்களாக அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ளன

கிழக்கு மாகாணத்தில் 6 பகுதிகள் சிவப்பு வலயங்களாக அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2021 | 2:48 pm

Colombo (News 1st) கிழக்கு மாகாணத்தில் 6 பகுதிகள் கொரோனா தொற்றுக்கான சிவப்பு வலயங்களாக அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு, திருகோணமலை நகர், காத்தான்குடி, அட்டாளைச்சேனை, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, மற்றும் உகன ஆகிய 6 பகுதிகளும் சிவப்பு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் 24 மணித்தியாலயத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கல்முனை நகரப்பகுதியில் சில கிராமசேவகர் பிரிவுகளும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவும் திருகோணமலை நகர் பகுதியும் தனிமைப்படுத்ப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்