காதல் திருமணம் செய்துகொண்ட ஆனந்தி 

காதல் திருமணம் செய்துகொண்ட ஆனந்தி 

காதல் திருமணம் செய்துகொண்ட ஆனந்தி 

எழுத்தாளர் Bella Dalima

08 Jan, 2021 | 4:56 pm

கயல், பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆனந்தி காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஆனந்திக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் நேற்று (07) திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனந்தியின் கணவர் சாக்ரடீஸ் மூடர் கூடம் பட இயக்குனர் நவீனின் மைத்துனர் என்பதுடன், நவீன் இயக்கியுள்ள அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இந்தப் படத்தில் ஆனந்தி தான் கதாநாயகி. படப்பிடிப்பின் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

பின்னர் இருவீட்டாரும் சம்மதித்ததை அடுத்து, தற்போது அது திருமணத்தில் முடிந்துள்ளது.

சாக்ரடீஸ் தற்போது நவீன் இயக்கும் அக்னி சிறகுகள் படத்திலும் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். விரைவில் ஒரு படத்தை இயக்கவும் உள்ளாராம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்