உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

எழுத்தாளர் Bella Dalima

08 Jan, 2021 | 4:46 pm

Colombo (News 1st) உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த எலான் மஸ்க் (Elon Musk) அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை (Jeff Bezos) பின்னுக்குத் தள்ளி, முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மின்னல் வேக ஹைப்பர் லூப் பயணம் (Hyperloop Transportation Technologies), செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி, அதிவேக எலெக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என பல்வேறு கனவுத் திட்டங்களின் கதாநாயகனாக திகழ்கிறார் எலான் மஸ்க்.

கடந்த சில வாரங்களாக உலக பணக்காரர்கள் வரிசையில் இவர் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

இந்நிலையில், எலான் மஸ்கின் சொத்து மதிப்பு நியூயார்க்கில் நேற்று காலை 10.15 மணிக்கு 188.5 பில்லியன் டொலராக இருந்தது. இது அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை விட 1.5 பில்லியன் டொலர் அதிகமாகும்.

Tesla-வின் பங்கு அதிவேக வளர்ச்சியில் செல்வதால், அதன் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பும் உயர்ந்து கொண்டு செல்கிறது. கடந்த ஆண்டு மட்டும் Tesla-வின் பங்குகள் 743 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஜெஃப் பெசோஸ் கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல் உலக பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்