உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுடன் மற்றுமொரு விமானம் வருகை

உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுடன் மற்றுமொரு விமானம் வருகை

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2021 | 6:17 pm

Colombo (News 1st) உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய மற்றுமொரு விமானம் இன்று மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இன்று பகல் 2 மணியளவில் அவர்கள் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

குறித்த விமானத்தில் 140 உக்ரைன் பிரஜைகள் வருகை தந்ததாகவும் அவர்களை PCR சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ள ஆறாவது சுற்றுலா குழுவினர் இவர்களாவர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்