இலஞ்ச குற்றச்சாட்டு: கண்டி நகர சபை உறுப்பினர்கள் இருவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச குற்றச்சாட்டு: கண்டி நகர சபை உறுப்பினர்கள் இருவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச குற்றச்சாட்டு: கண்டி நகர சபை உறுப்பினர்கள் இருவருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2021 | 2:58 pm

Colombo (News 1st) இலஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கண்டி நகர சபையின் இரண்டு உறுப்பினர்களும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதம நீதவான் மொஹமட் மிஹார் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கண்டி நகர எல்லைக்குள் டிஜிட்டல் பதாகை ஒன்றை பொருத்துவதற்கு உதவி புரிவதற்காக வர்த்தகர் ஒருவரிடம் ஒன்றரை இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, COVID-19 தொற்று பரவல் நிலையில் உத்தரவின்றி சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியமைக்காக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் கண்டனம் வௌியிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்