135Mn பெறுமதியான Ecstasy போதை வில்லைகள் கைப்பற்றல்

இலங்கையில் முதன்முறையாக Ecstasy போதை வில்லைகள் கைப்பற்றல்

by Bella Dalima 07-01-2021 | 5:26 PM
Colombo (News 1st) பெல்ஜியத்தில் இருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட 135 மில்லியன் ரூபா பெறுமதியான போதை வில்லைகளை இலங்கை சுங்கம் கைப்பற்றியுள்ளது. மத்திய தபால் பரிமாற்றகத்தில் இந்த போதை வில்லைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எக்ஸ்டசி (Ecstasy) வகையிலான 18,000 போதை வில்லைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க ஊடகப்பேச்சாளர் மேலதிக சுங்க பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார். Ecstasy போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவென சுங்க ஊடகப்பேச்சாளர் கூறினார். விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொதியில் இருந்து இந்த போதை வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.