கடும் மழையால் தலதா மாளிகை மதில் இடிந்து வீழ்ந்தது

கடும் மழையால் தலதா மாளிகை மதில் இடிந்து வீழ்ந்தது

எழுத்தாளர் Bella Dalima

07 Jan, 2021 | 8:19 pm

Colombo (News 1st) நேற்று (06) பெய்த கடும் மழையால் கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள பாதுகாப்பு மதில் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.

தலதா மாளிகைக்கு அருகிலுள்ள ஶ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாகவுள்ள பாதுகாப்பு மதிலே சேதமடைந்துள்ளது.

குறித்த மதிலின் சுமார் 100 மீட்டர் பகுதி சேதமடைந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்