ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கு கட்டணம் அறவிடப்படுவது தொடர்பில் விசாரணை தேவை – நாமல் 

ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கு கட்டணம் அறவிடப்படுவது தொடர்பில் விசாரணை தேவை – நாமல் 

எழுத்தாளர் Staff Writer

06 Jan, 2021 | 12:37 pm

Colombo (News 1st) கடந்த காலத்தில் சிற்சில ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்காக அறவிடப்பட்ட கட்டணங்கள் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.

வௌிநாட்டிலிருந்து அழைத்து வரப்படும் இலங்கை பணியாளர்கள், அதிக கட்டணத்துடன் ஹோட்டல்களில் தனிமைப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பதை அமைச்சர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்டு ஹோட்டல்களில் தனிமைப்படுத்துவதை நிறுத்தி, அரசினால் இலவசமாக அனைத்து பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ மேலும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்