வாழ்த்து மழையில் நனையும் இசைப்புயல்

வாழ்த்து மழையில் நனையும் இசைப்புயல்

வாழ்த்து மழையில் நனையும் இசைப்புயல்

எழுத்தாளர் Bella Dalima

06 Jan, 2021 | 3:35 pm

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இன்று (06) தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

இதையடுத்து, அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலக இசையை உலகெங்கும் கொண்டு சேர்த்தது மட்டுமல்லாமல், தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை பெற்று, சர்வதேச அரங்கில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ஏ.ஆர். ரஹ்மான்.

1966 ஆம் ஆண்டு பிறந்த ஏ.ஆர்.ரஹ்மான், அவரது ஆரம்ப காலங்களில் சுமார் 500 படங்களுக்கும் மேல் இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றினார். அதன் பின்னர் சில ஆண்டுகள் விளம்பரங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம், திரைப்படங்களுக்கும் இசையமைக்க ஆரம்பித்தார்.

முதல் திரைப்படமாக இருந்தாலும், யாருமே எதிர்பார்க்காத வகையில் அது ரஹ்மானுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. ரோஜா திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் தனித்துவமான இசையை ரசிகர்கள் கொண்டாட தொடங்கிய நிலையில், மறுபுறம் அது அவருக்கு முதல் தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.

அதன் பின்னர் தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி, பொலிவுட், ஹொலிவுட் என சர்வதேச எல்லைகளிலும் தடம் பதிக்கத் துவங்கினார் ரஹ்மான். இதனிடையே அவர் வெளியிட்ட ‘வந்தே மாதரம்’ என்ற இசைத் தொகுப்பு அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சேர்த்தது.

‘பாம்பே ட்ரீம்ஸ்’ என்ற மேடை நாடகம் உள்ளிட்ட இசைத் துறையின் பல்வேறு பரிமாணங்களிலும் தனது திறமைகளை அழுத்தமாக பதிவு செய்தார் ரஹ்மான்.

ரோஜாவுக்கு கிடைத்த தேசிய விருது முதல், இதுவரை ரஹ்மான் பெற்ற விருதுகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

6 தேசிய விருதுகள், 32 பிலிம்பேர் விருதுகள், 11 IIFA விருதுகள், இரண்டு ஆஸ்கர் விருதுகள், பாப்தா, கிராமி விருதுகள் என சர்வதேச அளவில் இசைக்காக வழங்கப்படும் எண்ணற்ற விருதுகளையும் அவர் சுவீகரித்துள்ளார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரஹ்மானுக்கு பலரும் சமூக வலைத்தளங்களிலும் நேரிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனால் HappyBirthdayARRahman எனும் hashtag ட்விட்டரில் Trend ஆகி வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்