சிறுத்தை நஞ்சூட்டப்பட்டு கொலை : நால்வர் கைது

சிறுத்தை நஞ்சூட்டப்பட்டு கொலை : நால்வர் கைது

எழுத்தாளர் Staff Writer

06 Jan, 2021 | 1:43 pm

Colombo (News 1st) மாத்தளை – ரஜ்ஜமன நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை, கொல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கைக்கே உரித்தான குறித்த சிறுத்தைக்கு நஞ்சூட்டப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக மாத்தளை வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர், பி.எம்.பி. விஜேகோன் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களிடமிருந்து 5 புலிப்பற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாத்தளை பிரதேச சபைக்குட்பட்ட ரஜ்ஜம்மன நீர்த்தேக்க அணைக்கட்டில் 3 அடி உயரமும், 5 1/2 அடி நீளமுமான இலங்கைக்கே உரித்தான சிறுத்தையொன்றின் உடல் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் வனஜீவராசி அதிகாரிகளும் கால்நடை வைத்தியர்களும் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் CCTV காணொளிகளை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக மாத்தளை வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர், பி.எம்.பி. விஜேகோன் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்