சதொச வாகன முறைகேடு வழக்கு: சந்தேகநபர்கள் 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிப்பு

சதொச வாகன முறைகேடு வழக்கு: சந்தேகநபர்கள் 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிப்பு

சதொச வாகன முறைகேடு வழக்கு: சந்தேகநபர்கள் 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Jan, 2021 | 4:47 pm

Colombo (News 1st) முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மொஹம்மட் மஹ்ரூப் மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளர் மொஹம்மட் அஸ்லாம் உள்ளிட்ட சந்தேகநபர்கள் 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை கோட்டை நீதவான் பிரியந்த லியனகே இன்று விடுவித்தார். சந்தேகநபர்கள் தமது வௌிநாட்டு கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 2015 – 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் லங்கா சதொச-விற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் அன்றைய தினத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்