இந்தியாவில் புத்தாண்டு தினத்தில் 60,000 குழந்தைகள் பிறப்பு

இந்தியாவில் புத்தாண்டு தினத்தில் 60,000 குழந்தைகள் பிறப்பு

இந்தியாவில் புத்தாண்டு தினத்தில் 60,000 குழந்தைகள் பிறப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Jan, 2021 | 3:17 pm

Colombo (News 1st) இந்தியாவில் புத்தாண்டு தினத்தன்று 60,000 குழந்தைகள் பிறந்துள்ளதாக UNICEF தெரிவித்துள்ளது.

2021 புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3,71,500 குழந்தைகள் பிறந்துள்ளதாக UNICEF குறிப்பிட்டுள்ளது.

அன்றைய தினத்தில் முதல் குழந்தை பிஜி நாட்டிலும் கடைசிக் குழந்தை அமெரிக்காவிலும் பிறந்துள்ளது.

புத்தாண்டில் பிறந்த மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் 10 நாடுகளில் பிறந்துள்ளன.

இதில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, சீனாவில் 35,615, நைஜீரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161, இந்தோனேசியாவில் 12,336, எத்தியோப்பியாவில் 12,006, அமெரிக்காவில் 10,312, எகிப்தில் 9,455, வங்காளதேசத்தில் 9,236, காங்கோவில் 8,640 குழந்தைகள் பிறந்துள்ளன.

இந்த ஆண்டில் உலகம் முழுவதும் மொத்தம் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று UNICEF மதிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்