Colombo (News 1st) ஹப்புத்தளை நகர சபையின் புதிய மேயராக உபுல் திசாநாயக்க இன்று பதவியேற்றுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக பிரதமர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மேயர் சம்பத் லமாஹேவா பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு உபுல் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
1997 ஆம் ஆண்டு நகர சபை உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த உபுல் திசாநாயக்க இதற்கு முன்னரும் ஹப்புத்தளை நகர மேயராக செயற்பட்டுள்ளார்.
