by Staff Writer 05-01-2021 | 5:48 PM
Colombo (News 1st) கொரோனா நோயாளர்கள் மேலும் 445 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதற்கிணங்க, நாட்டில் இதுவரை 38,262 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 45,242 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இவர்களில் 6,765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லிந்துலை பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட தோட்டப்பகுதிகளில் இன்றைய தினம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் எஸ்.புஸ்பகாந்தன் தெரிவித்தார்.