கடத்தப்பட்ட தேரரின் உடல் மயானத்திலிருந்து மீட்பு

கடத்தப்பட்ட தேரரின் உடல் மயானத்திலிருந்து மீட்பு

by Staff Writer 05-01-2021 | 1:59 PM
Colombo (News 1st) கடத்தப்பட்டதாக கூறப்படும் ஹங்வல்ல கொடிகந்த விகாரையின் தேரர் ஒருவரின் சடலம் கொடதெனியாவ நாவான பிரதேசத்தின் மயானம் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 65 வயதான உடுவில தம்மசிறி தேரர் கடந்த 2ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த தேரரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.