இலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்: தென்னாபிரிக்கா 10 விக்கட்களால் வெற்றி

இலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்: தென்னாபிரிக்கா 10 விக்கட்களால் வெற்றி

இலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்: தென்னாபிரிக்கா 10 விக்கட்களால் வெற்றி

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2021 | 6:56 pm

Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா 10 விக்கட்களால் வெற்றியீட்டியது.

இதனையடுத்து தொடரை 2-0 என தென்னாபிரிக்கா கைப்பற்றியது.

இலங்கை அணி நிர்ணயித்த 67 ஓட்டங்கள் வெற்றியிலக்கை நோக்கி இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா விக்கட் இழப்பின்றி அந்த இலக்கைக் கடந்தது.

Aiden Markram 36 ஓட்டங்களையும் Dean Elgar 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

முன்னதாக நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது 4 விக்கட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை அணி அதன் இரண்டாம் இனிங்ஸை இன்று தொடர்ந்தது.

91 ஓட்டங்களைப் பெற்றிருந்த அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தனது 10 ஆவது டெஸ்ட் சதத்தைக் கடந்தார்.
நிரோஷன் திக்வெல்ல 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் 211 ஓட்டங்களுடன் நிறைவுக்கு வந்தது.

பந்துவீச்சில் Lungi Ngidi 4 விக்கட்களையும் Lutho Sipamla 3 விக்கட்களையும் வீழ்த்தினர்.

ஜொஹன்னஸ்பேர்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி, முதல் இனிங்ஸில் 157 ஓட்டங்களைப் பெற்றது.

தென்னாபிரிக்கா முதல் இனிங்ஸில் 302 ஓட்டங்களைப் பெற்றது.

இதனடிப்படையில், இலங்கையை விட 145 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்