அத்துரலியே ரத்தன தேரர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

அத்துரலியே ரத்தன தேரர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2021 | 10:43 am

Colombo (News 1st) எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலியே ரத்தன தேரர் இன்று (05) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அத்துரலியே ரத்தன தேரரின் பெயரை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்திருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்