கஜமுத்து வியாபாரம் சுற்றிவளைப்பு

கஜமுத்து வியாபாரம் சுற்றிவளைப்பு

by Staff Writer 04-01-2021 | 3:06 PM
Colombo (News 1st) ஆறு கஜமுத்துக்களை 15 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த சந்தேக நபர் ஒருவர் மாத்தறையில் கைது செய்யப்பட்டுள்ளார். உளவாளி ஒருவரை பயன்படுத்தி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். காலி - உனவட்டுவ பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.